ஆண்டிபட்டி பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்படி ஆண்டிபட்டி அருகே உள்ள மணியகரன்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இதே போன்று கொண்டமநாயக்கன்பட்டி ராஜகோபாலன்பட்டி கிராமங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சங்கர், ஆண்டிபட்டி டிஎஸ்பி சீனிவாசன்,, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உஷா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சண்முகவடிவு, ஏ எச் எம் டிரஸ்ட் சார்பில் இப்ராஹிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image