இ-பாஸ் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கும் நெல்லை பொதுமக்கள்-விதிகளை எளிதாக்கிட தமிழக அரசுக்கு கோரிக்கை…

இ-பாஸ் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும், விதிமுறைகளை எளிதாக்கிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நெல்லை பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இதனால் மாநிலம் மற்றும் சொந்த மாவட்டம் விட்டு அடுத்த மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்தவர்கள் தற்போது ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் சொந்த ஊர் திரும்பி செல்கின்றனர். அவ்வாறு திரும்பி செல்வதற்கு E-PASS கட்டாயம் எடுத்துதான் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

தற்போது திருமணம், இறப்பு, மருத்துவம் போன்றவைகளுக்கு மட்டுமே E-PASS வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பலர் பாஸ் கிடைக்காமல் சொந்த ஊர் திரும்பாமல் பரிதவித்து வருகின்றனர்.உரிய ஆவணங்கள் இணைத்தும் இப்போது E-PASS கிடைப்பதில்லை என்று பலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.சென்னையில் இருந்து நெல்லைக்கு வர தனியார் டிராவல்ஸ்க்கு மட்டும் இ-பாஸ் கிடைப்பதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.அவ்வாறு தனியார் டிராவல்ஸ் மூலம் வருபவர்களிடம் பல ஆயிரம் ருபாய் வாங்கப்படுவதாகவும் இதில் முறைகேடுகள் நடப்பதாகவும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தனியார் டிராவல்ஸ் மூலம் நடைபெரும் முறைகேட்டினை சம்பந்தபட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்றும் இ-பாஸ் நடைமுறையை அனைவரும் பெரும் வகையில் எளிதாக்க வேண்டும் என்றும் நெல்லை மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image