காரியாபட்டியில் நவீன புறக்காவல் நிலையம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் சார்பில் பஸ் நிலையம் முன்பு நவீன புறக்காவல் நிலையம் அமைத்து திறப்பு விழா நடைபெற்றது.காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் பஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் போக்குவரத்து இடையூறுகளை சரி செய்வதற்காக புறக்காவல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நகரத்தை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காரியாபட்டிக்கு தான் வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் குற்ற சம்பவங்களை குறைக்கவும் விபத்துக்களை தடுக்கும் விதத்திலும், பஜார் பகுதி, பஸ் நிலையம், முக்குரோடு ஆகிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, புறக்காவல் நிலையத்தில் அனைத்து பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராவை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரியாபட்டி சார்பு ஆய்வாளர்கள் வினோத்குமார், தமிழகன், முருகன் ஆகியோர் முழு முயற்சியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷன் தலைமை வகித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன், காவல் ஆய்வாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சார்பு ஆய்வாளர் வினோத்குமார் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் திறந்து வைத்தார். கொரோனா ஊரடங்கால் சமூக இடைவெளி விட்டு நடைபெற்றது. உடன் சார்பு ஆய்வாளர்கள் பிச்சைப்பாண்டி, தண்டீஸ்வரன், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் முருகன், கலைச்செல்வன், சொக்கப்பன், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..