அவசரகதியில் திறக்கப்பட்ட மதுரை காளவாசல் மேம்பாலம். இருளில் மூழ்கிக் கிடக்கும் அவலம்.

மதுரை மாவட்டம் காளவாசல் சந்திப்பில் கன்னியாகுமரி வாரணாசி மேம்பாலம்  கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இது அவசர கதியில் திறக்கப்பட்டதால் இந்த பாலத்தில் தெரு விளக்கு ஒன்று கூட எரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேரங்களில் போதிய விளக்கு வெளிச்சங்கள் இல்லாத காரணத்தினால் மாலை 7 மணிக்கு மேலே அதில் செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

முற்றிலும் இருள் சூழ்ந்து காணப்படும் ,இந்த மேம்பாலத்தில் விளக்குகள் அமைக்காமல் பாலத்தை திறந்து ஏன் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். இரவு நேரங்களில்  வாகனத்தில் செல்வோர் அல்லது சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் உயிர் பலியை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். தற்காலிகமாக இரவு நேரங்களில் பாலத்தை மூடுவதற்கு சரியாக இருக்கும் என்பது பொது மக்களின் கருத்தாக இருக்கிறது அல்லது இரவில் விளக்கு எரியும் வகையில் செய்து பொது மக்களின் உயிர் காக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image