மதுரை விளாங்குடி அருகே தனியார் நூற்பாலையில் திடீர் தீ விபத்து

மதுரை விளாங்குடி அருகே மூன்றாண்டுகளுக்கும் மேலாக செயல் படாமல் இருந்துவந்த தனியார் நூற்பாலையில் திடீர் தீ விபத்து – 5 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்– பெரும் விபத்து தவிர்ப்பு இதுகுறித்து தீவிபத்தில் சந்தேகம் உள்ளதா என கூடல்புதூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை மாவட்டம் விளாங்குடி அருகே உள்ளது செல்வராஜ் டெக்ஸ்டைல் என்ற தனியார் நூற்பாலை.,இந்த நூற்பாலையானது கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்து வந்துள்ளது.,மேலும் போதிய கடன் உதவி செலுத்த முடியாத காரணத்தினால் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீல் வைக்கப்பட்டது., ஏலத்துக்கு விடுவதாக வங்கி நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது…இதனால் இந்த நூற்பாலையில் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது.,

இந்நிலையில் நேற்று திடீரென இரவு புகை மூட்டத்துடன் மளமளவென தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் கண்டதை அடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.,தகவலறிந்து விரைந்து வந்த மதுரை  தீயணைப்புத்துறையினர்  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வங்கி வைத்துள்ள சீலை உடைத்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான 3 குடிநீர் வாகனங்களை வைத்து ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக துரிதமாக விரைந்து போராடி தீயை அணைக்கும் முயற்சியில் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.,இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.,மூன்றாண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்து வந்துள்ள இந்த நூற்பாலையில் மின்சாரம் இல்லாத நிலையில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்தும் சதி வேலை காரணமாக தீ வைக்கப்பட்டதால் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.,இந்த நூற்பாலையில் சுற்றி அக்கம்பக்கத்தில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் பெட்ரோல் நிலையங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது….

புனித ரமலான் வாழ்த்துக்கள்..