இராமநாதபுரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம்.. வருவாய் ஆய்வாளர் கைது ..

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே பூந்தோண்டியை சேர்ந்த விவசாயி சோமு. இவர் சமீபத்தில் இறந்தார். உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளியான சோமுவின் இறப்பிற்கு  அரசு வழங்கும் ஈமச்சடங்கு ரூ.20 ஆயிரம் பெற சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை சோமு மனைவி சேது, அவரது உறவினர் தனசேகரன் அணுகினர். நிவாரணத்திற்காக சேது சமர்ப்பித்த விண்ணப்பத்தை அலுவலக இளநிலை வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரன் ஏற்றுக்கொண்ட நிலையில். விண்ணப்பத்தை தாசில்தாருக்கு அனுப்பி நிவாரணம் பெற்றுத் தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டு ஈஸ்வரன் வற்புறுத்தியுள்ளார்.

இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தனசேகர் இன்று (04.8.2020) புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர். ரசாயன பொடி தடவிய 2,000/- ரூபாய் தாளை தனசேகரிடம் இருந்து ஈஸ்வரன் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., உன்னி கிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் பீட்டர், ராஜேஸ்வரி, சார்பு ஆய்வாளர்கள் முத்துராமலிங்கம், கேசவராமன், ரவி, சீனிவாசரங்கன், போலீசார் சண்முகநாதன், சங்கர், சுந்தரக் குமார், சுந்தரேசன் ஆகியோர்  சுற்றி வளைத்து பிடித்தனர். தர்மபுரியைச் சேர்ந்த ஈஸ்வரன்  டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடி பணி நியமனம் பெற்று ஓராண்டு தான் ஆகிறது.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image