நெல்லை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்..

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.அதை தொடர்ந்து மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன், செவிலியர் கலாவதி, கோகிலா, மேற்பார்வையாளர் முருகன் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் கனகப்ரியா சித்த மருத்துவ அலுவலர் அருள் செல்வன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பாளையங்கோட்டை ஏ ஆர் லைன் காவலர் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு தோறும் சென்று காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளதா, என ஆய்வு செய்வதோடு, தெர்மல் ஸ்கேனர், மூலம், காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும், pulse oxy meter மூலம் மூச்சு திணறல் உள்ள நபர்கள் கண்டறிய படுகின்றனர். மேலும் குடும்பத்திலுள்ள நபர்கள், முதியவர்கள், சர்க்கரை வியாதி, இருதய பிரச்னை உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறித்து, பதிவு செய்து வருகின்றனர்.அனைத்து வீடுகளிலும், மொபைல் எண்களுடன் முழு தகவல்கள் பெறப்படுவதோடு, கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால், உடனடியாக மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டனர். மேலும் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.பொது மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பராமரித்தல், அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட கொரோனா குறித்த விழிப்புணர்வு கையேடு விநியோகிக்கும் பணியும் மேற்கொள்ளபட்டது.மாநகராட்சி வாகனம் மூலம், விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கிருமி நாசினி தெளித்தல், உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்தி

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image