உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லாததால் மாத சம்பளம் எடுக்கமுடியாமல் அரசு ஊழியர்கள, பொதுமக்கள் அவதி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு வங்கி; மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு இன்று மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பளம் எடுப்பதற்காக உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் எந்த ஏடிஎம்களிலும் பணம் இல்லாததால் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் பணம் எடுப்பதற்காக மாறி,மாறி அனைத்து ஏடிஎம்களுக்கும் உள்ளே சென்றும் பணம் இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஒருசில ஏடிஎம்களில் பணம் இருந்தும் ரகசிய எண்ணை பதிவு செய்த பின் தேவையான பணம் என்கிற பட்டனை அழுத்தி;ய பின் பணம் வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.இது குறித்து வங்கி மேலாளரிடம் தொடர்ச்சியாக பொதுமக்கள் புகார் அளித்ததால் சில ஏடிஎம் வாசலின் ஷட்டர் கதவை பாதி அடைத்து விட்டுச் சென்றனர்.ஏற்கனவே கொரோனா ஊரடங்கினால் கையில் பணமில்லாமல் திண்டாடும் மக்கள் ஏடிஎம்மில் பணம் இல்லாததால் மேலும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..