ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர் போராட்டம்

தனுஷ்கோடி கடலில் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி காத்திருப்பு போராட்டம் நடத்த ராமேஸ்வரம் தீவு அனைத்து நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் மீனவர்கள், கடல் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு)திட்டமிட்டனர. பொது முடக்க ஊரடங்கு உத்தரவையடுத்து மீன்வளத்துறை அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டமாக மாற்றினர்.. இப் போராட்டத்திற்கு கடல் தொழிலாளர் சிஐடியு சங்க மாவட்ட செயலாளர்கருணாமூர்த்தி தலைமை வகித்தார். ஐந்து கடல் மைல் தொலைவில் ஒளிரும் மிதவைகளை கடலில் அமைக்க வேண்டும், கரையோர மீன் பிடியில் ஈடுபடும் விசைப்படகுகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கடல் வளம், மீன் வளத்தை அழிக்குட் இரட்டை வலை, சுருக்கு மடி மீன்பிடியை தடுக்க வேண்டும், மீன்பிடி ஒழுங்கு முறைகளை மீறி மீன்பிடியில் ஈடுபடும் படகுகள், நடுக்கடலில் அரங்கேறும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க மீன்வளத்துறை, மெரைன் போலீசாருக்கு ரோந்து படகுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,கடலுக்குள் அதிக ஒளி மின் விளக்கை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..