நெல்லையில் காவலர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…

நெல்லையில் காவலர்களுக்கான ஆன்லைன் வகுப்பு (Stress Management Class) Fx காலேஜ்-ல் துவங்கி நடைபெற்று வருகிறது.டிஜிபி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஏற்படும் மன அழுத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள், காவலர்கள் பார்க்கும் வேலைகளில் ஏற்படும் பிரச்சினைகள் சம்பந்தமாக சென்னையில் இருந்து ஆன்லைன் மூலமாக மனநல நிபுணர்கள், காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள், வகுப்புகள் நடத்துகின்றனர்.

இதில் ஆயுதப்படை காவலர்களுக்கும், தனிப்பிரிவு காவலர்களுக்கும் Fx காலேஜ்-ல் வைத்தும் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு ம.சு.பல்கலை கழகத்தில் வைத்தும் 30 பேர் வீதம் ஒரு மாதம் நடத்தப்படுகிறது.கூடுதல் துணை ஆணையாளர் முதல் காவலர்கள் வரை அனைவரும் மொத்தத்தில் மாநகரில் ஒரு மாதத்தில் 1800 பேர் கலந்து கொள்கின்றனர்.தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட மாநகரங்களில் இவ்வகுப்புகள் நடைபெறுகிறது. மாநகரில் Fx காலேஜ் ல் காவல் ஆணையாளரும் யுனிவர்சிட்டியில் காவல் துணை ஆணையாளரும் (சட்டம் மற்றும் ஒழுங்கு) துவக்கி வைத்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..