கொரோனாவை காரணம் காட்டி பொதுமக்கள் பணியை கிடப்பில் போட்டுவிட்டு.. தனி மனித முதலாளிக்கு விஷ்வாசம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறப்பு, பிறப்பு சான்று, ஆதரவற்ற முதியோர் சான்று, பட்டா மாறுதல் போன்ற பணி வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.இதையெல்லாம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் மக்களுக்காக எந்த ஒரு பணியும் செய்யவில்லை எனவும்.ஆனால் தனி முதலாளிகளின் லாப தேவைக்காக அனைத்து விசயங்களையும் செய்து தருகின்றார் எனவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலையூர் 2வது ஊராட்சியில் கருவேலம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த கல்குவாரியால் இப்பகுதியில் மாசு ஏற்படுவதாகவும் அருகில் உள்ள வீடுகள்,பள்ளிகளில் விரிசல் ஏற்படுவதாக புகார் அளிக்கப்பட்டு ஆய்வு நடத்தியதில் மேற்கண்ட பிரச்சனை இருந்தது ஆய்வில் தெரியவந்தது.இதை அடுத்து மாவட்ட நிர்வாகத்தால் இந்த ஆலை இயங்க தடை விதிக்கப்பட்ட நிலையில் புதிதாக பொறுப்பேற்ற திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அவர்கள் ஆலை இயங்க அனுமதி அளித்தது இப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..