தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்,புத்தக பை வழங்குதல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்களும்,புத்தக பைகளும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.2,3,4,5,7,8 வகுப்புகளில் பயிலும் அரசு,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பாடப் புத்தகங்கள் வினியோகம் துவங்கியது.தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் தயாராகியுள்ளன. இந்த புத்தகங்கள், மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. அவை, ஒவ்வொரு மாணவருக்கும், தனித்தனி பண்டல்களாக ஆசிரியர்களால் பிரித்து வைக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, பாடப் புத்தகங்களுடன் தமிழக அரசின் விலையில்லா புத்தக பையும் வழங்கப்பட்டது .

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் வழங்கினார்கள் .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வந்ததால் பெரும் மகிழ்ச்சி அடைத்தனர்.பாடப்புத்தகங்களை முறையான சமூக இடைவெளியை பின்பற்றி ஆசை,ஆசையாக பெற்றுக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image