கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கான நிரந்தர பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது,,,

மதுரை மாவட்டம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.அதில் ஒரு பணியாக மதுரை செல்லூர் பகுதியில் உள்ள ராஜா மில் பாலம் முதல் தெப்பக்குளம் வரையிலான வைகை ஆற்றின் இருபுறமும் சுவர்கள் அமைத்து பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.அதில் முக்கிய பணியாக ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக நிரந்தர பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக மதுரை மாநகராட்சி சார்பாக வருடம் தோறும் 40 முதல் 45 லட்சம் வரை செலவு செய்து வருகிறது

அதில் மிக முக்கிய செலவாக வருடம்தோறும் கள்ளழகர் இறங்குவதற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.இதனால் நிரந்தர பாலம் அமைக்கும் பணி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜனவரி 29-ம் தேதி தொடங்கியது மேலும் நோய்த்தொற்றின் காரணமாக 120 நாட்களுக்கு மேலாக இந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக கள்ளழகர்காக நிரந்தர பாலம் அமைப்பதற்கான பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது…

செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..