திருவண்ணாமலை மாவட்டத்தில்பாரத சாரண சாரணியர் இயக்கம் – உலக கழுத்துக் குட்டை தினம் கொண்டாட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில்
பாரத சாரண சாரணியர் இயக்கம் – உலக கழுத்துக் குட்டை தினம் கொண்டாட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில்
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில்
உலக கழுத்துக் குட்டை தினம் கொண்டாடப்பட்டது. உலக சாரண சாரணியர் இயக்கத்தால் உலகம் தழுவிய அளவில் சாரண
சாரணியர்களால் சாரணர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் தாய்நாட்டிற்கும், தன் கடமையைச் செய்யவும், பிறருக்கு உதவி செய்யவும், சாரணர் இயக்கத்தின் சட்டத்தை பின்பற்றி தன்னம்பிக்கை, பற்று ,சகோதரத்துவம் மரியாதை, இயற்கையை நேசித்தல், சுயகட்டுப்பாடு பொதுசொத்தை பாதுகாப்பதில்துணை நிற்றல், திறன்களை மேம்படுத்திக் கொள்ளுதல், வாழ்வில் தூய்மையாக இருத்தல் , போரில்லா அழகான உலகத்தை வடிவமைப்பதில் சாரணர் இயக்கம் அடித்தளமாக உள்ளது.மேற்கண்ட லட்சியங்களை நினைவு கூர்ந்து சாரணர் இயக்கத்தினர் சாரணர் தினத்தில் கழுத்துக் குட்டை அணிந்து திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில்
மாவட்ட செயலாளர் ஜி.பியூலாகரோலின், கலைவாணி மாவட்ட பயிற்சிஆணையர், அருண்குமார், மாவட்ட அமைப்பு ஆணையர், மற்றும் சாரண சாரணியர்கள் பலவண்ண கழுத்துகுட்டைகளை காட்சிப்படுத்தியும், இயக்க உறுதிமொழியை ஏற்றும், சுகாதார உறுதி மொழியுடன் கொண்டாடினர்
போளூர் கல்வி மாவட்டத்தில்
பாரத சாரண சாரணிய இயக்கத்தினர்
மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அமிர்தா ,மாவட்ட அமைப்பு ஆணையர் ,ரமேஷ் மாவட்ட பயிற்சி ஆணையர் ஜமுனாராணி, மாவட்ட பயிற்சி ஆணையர் உள்ளிட்டோர் கழுத்துக் குட்டையை அணிந்து சாரண சாரணியஉறுதி மொழியை ஏற்று நினைவு கூர்ந்தனர்.
செங்கம் கல்வி மாவட்டத்தில்
மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமையில்
மாவட்ட அமைப்பு ஆணையர் ஸ்டெல்லா, மாவட்ட அமைப்பு ஆணையர் அன்பழகன், மாவட்ட பயிற்சி ஆணையர் பாலகுமார் சாரணர் இயக்க உறுதிமொழியை கழுத்துக்குட்டை அணிந்து உறுதி மொழி ஏற்று உலக சாரணர் தினத்தை கழுத்துக் குட்டை அணிந்தும் ,இயக்கத்தின் நோக்கம், விதிமுறைகள் நினைவு கூறி மாவட்டம் முழுவதும் சாரணர் இயக்கத்தினரால் வீட்டில் இருந்தபடியே சமூக இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது.

செங்கம், செய்தியாளர் சரவணகுமார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply