தியாகத் திருநாள் கொண்டாட்டத்தை தியாகம் செய்து சமூக பணியில் ஈடுபட்ட SDPI கட்சியினர்..

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்த 46 வயது ஆண் ஒருவர் கொரானா பரிசோதனை உறுதி செய்யப்படாத நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மரணமடைந்தார்.  எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இறந்தவரின் உறவினர்கள் உதவி கோரினர்.

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி உடலை பெற்றுக்கொண்டு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, வடக்கு தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர், புதூர் ஹமீது ஆகியோர் ஒருங்கிணைப்பில் தன்னார்வ தொண்டு செயல் வீரர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி பாதுகாப்பு வழி முறைகளை பின்பற்றி அவர் மத அடிப்படையை பின்பற்றும் வகையில் தொழுகை நடத்தி மதுரை புதூர் சங்கர் நகர் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image