நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீரென ஆய்வு

 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பூ மார்க்கெட் தற்காலிகமாக வத்தலக்குண்டு ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் மிகுந்த அளவில் பரிசோதனைக்கு இடையில் வியாபாரம் செய்ய நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டது. இதனால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு இருந்த கொரானாவின் தொற்று குறைந்துள்ளது.கடந்த வாரத்தில் இருந்து 3 நபர்கள் தான் கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், குறைவாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இன்னும் முற்றிலும் இல்லாத பேரூராட்சியாக அறிவிப்பதற்காக தீவிர நடவடிக்கையாக நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் நேற்று நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் அதிகாரிகள் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே திடீரென ஆய்வில் ஈடுபட்டனர்.

அங்கு சில பார்வைகளும் சில விவசாயிகளும் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி இன்றி இருந்ததை அறிந்து உடனடியாக முகக்கவசம் இன்றி யாரும் பூ வாங்கவோ ,விற்கவோ வரக்கூடாது என்றும், இதே நிலை தொடர்ந்தால் அவதாரமும் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.இந்த ஆய்வின்போது நிலக்கோட்டை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் கல்யாணி, மஞ்சுளா, மற்றும் சுகாதார உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered