மதுரையில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர் 10 லட்சம் கேட்டு கடத்தல் – போலீஸ் தீவிர விசாரணை

மதுரை எல்லீஸ் நகர் பசும்பொன் தேவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் இவர் சொந்தமாக Ni TV என்னும் உள்ளூர் தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று. மாலை வீட்டு வாசலில் நின்றிருந்த ஜெயராஜை மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்று பத்து லட்சம் கேட்டு மிரட்டுவதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.புகாரை பெற்றுக் கொண்ட மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் ஜெயராஜ் கடத்திய பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்வதற்கும் இப்பொழுது கடத்திய கார் பதிவினை கொண்டு மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து காவல் சோதனை சாவடியில் போலீசார் உஷார் படுத்தினர்.. எனினும் மதுரைமாவட்ட எல்லையை கடந்து விட்டதால் பக்கத்து மாவட்டங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது இந்த நிலையில் ஜெயராஜ் கடத்திய கும்பல் திண்டுக்கல் மாவட்டம் .செம்பட்டி அருகே செல்லும் போது போலீசார் மடக்கி பிடித்தனர் ஜெயராஜ் கடத்திய நபர்களை பிடித்து எஸ் எஸ் காலனி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் …. துரிதமாக செயல்பட்டு நடத்திய ஜெயராஜை சில மணி நேரங்களில் மீட்ட போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன ….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered