பக்ரீத் பண்டிகை வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்:

மதுரை மாவட்டம், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை முஸ்லீம்கள் வீடுகளில் தொழுகை நடத்தி குர்பானி வழங்கினர்.ஆண்டுதோறும், முஸ்லீம்கள் ரமலான், பக்ரீத், மிலாது நபி ஆகியவற்றின்போது, புத்தாடைகள் அணிந்து, பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கமாம். மேலும், பண்டிகை காலங்களில் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளில் குர் ஆனை ஓதிக்கொண்டு சென்று, பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவர்.அரசின் ஊரடங்கு உத்தரவால், இவர்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி, முஸ்லீம்கள் அனைவரும் வீடுகளில் சிறப்புத் தொழுகை நடத்தி குர்பானி வழங்கினர்.

இதேபோல், மதுரை மாவட்டம் எல்லிஸ் நகர் கோரிபாளையம் மாப்பாளையம் தெற்குவாசல் காஜிமார் தெரு உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் புறநகர் பகுதியான திருவேடகம், மேலக்கால், நாச்சிகுளம், திருவாலவாயநல்லூர், துவரிமான், கீழமாத்தூர், தேனூர், சமயநல்லூர், முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களும் வீடுகளில் சிறப்புத் தொழுகை நடத்தியும், குர்பானி வழங்கினர்.மேலும், மத நல்லிணக்கத்தோடு அனைத்து மதத்தினரோடு பண்டிகை கொண்டாட முடியாது வருத்தமளிப்பதாக பல முஸ்லிம்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..