மதுரையிலிருந்து ஈ-பாஸ் இல்லாமல் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. அமோக வியாபாரம்… ஆடியோ ஆதாரம்..

மதுரையிலிருந்து சென்னை போகணுமா கவலைய விடுங்க ஆதார் கார்டு எல்லாம் வேண்டாம் 2000 ரூபாய் பணம் கொடுத்தால் போதும் இ பாஸ் இல்லாமல் சென்னை சென்று விடலாம். கொரோனா வைரஸ் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருப்பது அனைவரும் அறிந்த விசயம்.  ஆனால் மதுரையில் பல தளங்களில் அலைபேசி எண்களுடன் வெளியூர் செல்ல விளம்பரம் செய்து அமோகமாக தொழில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தினசரி சென்னை,  பெங்களூர் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு மற்றும் பகல் நேரங்களிலும் மதுரை மாட்டுத்தாவணி இருந்து எந்த ஆவணங்களும் இல்லாமல் அழைத்து செல்வதாக நமது கீழை நியூஸ்( சத்திய பாதை மாத இதழுக்கு) வந்த தகவலின் படி, சமூக வலைதளங்களில் வந்த எண்ணில்  சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக மதுரை மாவட்ட நிருபர் பேசிய பொழுது ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் இல்லாவிட்டாலும் ரூ.2000/- செலுத்தினால் போதும் என கூறியது அதிர்ச்சி அஅளக்க கூடியதாக இருந்தது.

நம் நிருபர் பேசிய ஆடியோ கீழே..

இவ்வாறு  தினசரி இ பாஸ் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்று வருவது அம்பலமாகியுள்ளது.  போலியான இ பாஸ்களை பயன்படுத்தி செயல்பட்டு வருகிறார்களா என சந்தேகம் கிளம்பியுள்ளது.  மேலும் மாவட்ட நிர்வாகம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் இது போன்ற போலியான இ பாஸ் தயாரித்து பொது மக்களின் உயிரோடு விளையாடும் டிராவல்ஸ் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைவரும் கோரிக்கையாக உள்ளது. இதை தடுக்க அகவல் துறையினர் கடும் சோதனைகளில் ஈடுபடுவது மூலமே தடுக்க முடியும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..