பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினர் , முஸ்லீம் ஜமாத்தார்கள் கலந்துகொண்ட கூட்டம்

ஆகஸ்ட் 1-ம் தேதி முஸ்லீம் மக்களின் பக்ரீத் பண்டிகை நாளாக உள்ளதால் செம்பட்டி காவல் நிலையத்தில் ஆத்தூர், செம்பட்டி,சித்தையன்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தமுஸ்லீம் ஜாமாத்தார்கள் கூட்டம் செம்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்றது.இதில் பயிற்சி துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் ஆய்வாளர் ராஜேந்திரன் துணை ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அழைப்பை ஏற்று வந்த ஜாமாத்தார்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு பக்ரீத் வாழ்த்து கூறியதோடு அரசு அறிவிப்பின்படி ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் கூட்டம் சேராமல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பக்ரீத் பண்டிகையை கொண்டாடுமாறு ஆலோசனை வழங்கினர்.கூட்டத்தில் கலந்துகொண்ட ஜமாத்தார்கள் அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்று காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தந்து நல்குவதாக ஏற்று உறுதியளித்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply