உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் காவல்துறை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தமிழகம் முழுவதும் குரானா வைரஸ் நாளுக்கு நாள் அதிகம் பரவி வரும் நிலையில் அதை தடுக்க எவ்வாறு செயல்பட வேண்டும் என உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா ஆணைக்கிணங்க உசிலம்பட்டி தாலுகா காவல் சார்பு ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 18 ஊராட்சி மன்ற ஒருகினைப்பு தலைவர் அஜித்பாண்டி தலைமையிலும் நடைபெற்றது.இதில் ஒவ்வொரு ஊர்களிலும் கிராமங்களிலும் எவ்வாறு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,

இதில் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திலும் தினசரி கிருமிநாசினி தெளிக்கவேண்டும், முக கவசம் அணிவது அவசியத்தையும் ஊக்கப்படுத்தி முககவசம் அணிவதின் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டும், கடைகளில் சமூக இடைவெளி விட வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் நடக்கும் பணிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கவும் முகக்கவசம் அணிய வேண்டும், எனவும் ஒவ்வொரு ஊராட்சி மன்றத் தலைவர்களும் நேரில் சென்று அறிவுறுத்த வேண்டும் என உசிலம்பட்டி காவல்துறை சார்லஸ் எடுத்து கூறினார், இதில் ஊராட்சிமன்றத்தின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அஜித் பாண்டி மற்றும் 18 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal