Home செய்திகள் நிலக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

நிலக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

by mohan

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அரசு ஆகஸ்ட் 1ந் தேதிமாத ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.இதன் ஒரு பகுதியாகதமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலங்களை திறக்க அனுமதி அளித்தும்பிற மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கு குறைவான வருமானம் கொண்ட கோவில், தேவாலயம், மசூதிகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு சுற்று வட்டாரங்களில் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச் ஆகிய வழிப்பாட்டுத்தளங்களின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் யூஜின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் வட்டாட்சியர் யூஜின் பேசியதாவது, அரசு அறிவித்தது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் 5 நபர்களுக்கு மேல் கூட கூடாது வழிப்பாட்டுத்தளங்களில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியும் மற்றும் பல்வேறு அறிவுரைகளையும, ஆலோசனைகளின் எடுத்துக்கூறி பேசினார். இக்கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் சரவணக்குமார் வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!