தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி +1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி-பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டு…

தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 98 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.இப்பள்ளி மாணவி எம்.ஷிவாணி 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பெற்றார். இவரின் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-95, இயற்பியல்-99, வேதியியல்-99, உயிரியல்-95, கணிதம்-99. இவர் 97.66 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இப்பள்ளி மாணவி எம்.மகாலெட்சுமி 569 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம் பெற்றார். இவர் தமிழ்-99, ஆங்கிலம்-90, இயற்பியல்-94, வேதியியல்-95, உயிரியல்-92, கணிதம்-99 என மதிப்பெண்கள் பெற்றார். இவர் 94.83 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இப்பள்ளி மாணவர் எம்.சூர்யா 566 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடம் பெற்றார். இவர் வணிக கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். இவர் 94.33 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இப்பள்ளியில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 29 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். பள்ளியில் சராசரி மதிப்பெண் 74.6 சதவீதம் ஆகும்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால் சுசி, நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன், தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal