தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

▪️கோவிட்-19 பரவலை கருத்தில் கொள்ளாமல் ஊரக வளர்ச்சித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நிர்பந்திப்பதை கைவிட வேண்டும்.

▪️பழிவாங்கும் நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்ட கோவை மாவட்டத்தில் 4 ஊழியர்களின் மாவட்ட மாறுதல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

▪️முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் மீது ஒழுங்கு நடவடிக்கை குறித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பினை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

▪️ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கற்றதன் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள 17(ஆ) குற்றக் குறிப்பணையினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

▪️இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் பதவி உயர்வு ஆணைகளை உடனே வழங்கிட வேண்டும்.

▪️கோவிட்-19 பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி, நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கிட வேண்டும்.

▪️சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தின ஆய்வுகள் மற்றும் 6 மணிக்கு மேல் நடத்தப்படும் ஆய்வுகளை கைவிட வேண்டும். கணக்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணொளி, வயர்லெஸ் ஆய்வுகளை கைவிட வேண்டும்.

▪️கோவிட்-19 தடுப்பு பணிகள் சார்பாக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வரும் செலவினங்களை பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

▪️உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்

ஆகிய 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருப்பு பட்டை அணிந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர்ப பி.இராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் அ.ஜெயராமன், மாவட்ட இணைச் செயலாளர் சு.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் க.சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க கோட்டத் தலைவர் எம்.முகம்மது முஸ்தபா, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட செயலாளர் பா.பிச்சைக்கனி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சி.பழனி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.திருமலை முருகன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி வட்டார செயலாளர் கே.ராஜ்குமார், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்க மாநிலத் தலைவர் எம்.சுப்பிரமணியன், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் க.கங்காதரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் வெ.சண்முகசுந்தரம் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட் பொருளாளர் மா.மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal