நெல்லை தென்காசி மாவட்ட பகுதிகளில் புதிய பத்திர பதிவு அலுவலகம்; முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்…

நெல்லை தென்காசி மாவட்ட பகுதிகளில் புதிய பத்திர பதிவு அலுவலகம் திறக்கப்பட்டது. முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.நெல்லை ராதாபுரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் மிகவும் பழமையாக இடிந்து விழுந்து விழும் நிலையில் காணப்பட்டது. பழமை வாய்ந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டும் என ராதாபுரம் வட்டார பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை சட்டப்பேரவையில் வைத்த கோரிக்கையை ஏற்று ரூ. 75 லட்சம் செலவில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையால் அடிக்கல் நாட்டப்பட்டு புதிய பத்திரபதிவு அலுவலகத்தின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் இன்று இந்த புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்பதுரை எம்எல்ஏ கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய பத்திர பதிவு அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல துணைத் தலைவர் வி எஸ் ஆறுமுகம், திருநெல்வேலி உதவி பதிவுத்துறை தலைவர் கவிதா ராணி, பாளையங்கோட்டை இணைப் பதிவாளர் சண்முகசுந்தரம், ராதாபுரம் சார் பதிவாளர் லதா, உதவி பொறியாளர் (பொதுப்பணித்துறை)ஜான் ஆசீர், தாசில்தார் கனகராஜ் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.மேலும், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொண்டனர்.ரூபாய் 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இதைத்தொடர்ந்து கடையநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முகம்மது அபூபக்கர் (முஸ்லிம் லீக்), கடையநல்லூர் நகர அதிமுக செயலர் எம் கே முருகன், கடையநல்லூர் ஒன்றிய செயலர் முத்துப்பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையது சுலைமான், மாவட்டச் செயலர் இக்பால், நகர தலைவர் சையது மசூது, தொகுதி அமைப்பாளர் ஹைதர்அலி, மண்டல இளைஞரணி செயலர் கடாபி, மாநில இளைஞரணி துணைத்தலைவர் ஹபிபுல்லா, கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலர் செல்லத்துரை, அதிமுக நிர்வாகிகள் கருப்பையாதாஸ் ஜெயமாலன், அழகர்சாமி நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலர் முனியசாமி, திமுக பெருமாள்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ராஜசேகரன், சார்பதிவாளர் கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal