கவுன்சிலர் கைது செய்ய வலியுறுத்தி இரண்டாவது நாளாக நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் : –

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், கோமல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டை ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் மாமூல் தர வேண்டும் என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த, பாரதிய ஜனதா கட்சியை ஒன்றிய கவுன்சிலர் வினோத் என்பவர் மிரட்டல் விடுத்து ஊழியர்களை தாக்கி உள்ளார்.இதுகுறித்து பாலையூர் காவல் நிலையத்தில் ஊழியர்கள் புகார் அளித்து கடந்த மூன்று தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.ஆனால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை, கைது செய்ய வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள், 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சித்தர்காடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..