மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகுதிச்சான்று புதுப்பிக்க வரும் அனைத்து போக்குவரத்து வாகனங்களையும் புகைப்படம் எடுத்து புதுப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது

மதுரை சரக இணை போக்குவரத்து ஆணையர்  ரவிச்சந்திரன் மற்றும் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்  சுரேஷ்  உத்தரவின் பேரில் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகுதிச்சான்று புதுப்பிக்க வரும் அனைத்து போக்குவரத்து வாகனங்களையும் மோட்டார் வாகன ஆய்வாளர்  செந்தில்குமார்  ஆய்வுசெய்து அனைத்து பக்கங்களிலும் 5 புகைப்படங்கள் எடுக்கப்பட்டு போக்குவரத்து துறையின் இணைய பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டு தகுதி சான்று வழங்கப்படுகின்றன. இதற்கான அரசு ஆணை நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் மூலம் போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு வண்ணம் தோற்றம் பிரதிபலிப்பு பட்டைகள் வாகன பதிவு எண் இடது பக்கமாக வாகன குறிப்பு ஆகியவை முறையாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது……

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered