Home செய்திகள் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சி மன்றத் தலைவர்கள் உரிமையை வழங்க வேண்டுமென கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சி மன்றத் தலைவர்கள் உரிமையை வழங்க வேண்டுமென கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் வளாகப் பகுதியில் நிலக்கோட்டை ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சங்கத்தலைவர் டாக்டர் . வைகை பாலன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். சங்க பொருளாளர் முனிராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சிகளில் மத்திய அரசின் குடிநீர் திட்டம், மத்திய, மாநில அரசு மாநில குழு மானியக்குழு நீதி . மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு பணிகள் மொத்தமாக ஒப்பந்த முறையில் மாவட்ட ஊரக முகமை வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றது கண்டித்தும் ,இதனால் ஊராட்சித் தலைவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது .

இதை. கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆகையால் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சி வாயிலாக பணிகளை மேற்கொள்ள ஊராட்சி தலைவருக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும் என்று ஊராட்சி கூட்டமைப்பு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை பணிகளை செய்ய உயர்மட்ட அதிகாரிகளும், அரசியல் செல்வாக்குக் கொண்ட ஒன்றிய பொறுப்பாளர்களும் முறைகேடாக செயல்படுவதற்கு அதிகாரிகள் உறுதுணையாக இருப்பதை இந்த கூட்டத்தில் வன்மையாக கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 27.07.2020 தேதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைகளை அடிப்படை வசதிகளை வேண்டி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து மனு கொடுப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் முனி ராஜா, இக்கூட்டத்தில் சங்க துணைத்தலைவர்கள் காளிதாஸ் நாகேந்திரன், துணைச் செயலாளர்கள் தீபா, பழனியம்மாள், யசோதை மற்றும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!