பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயகக் கருப்பு முகமூடி அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயகக் கருப்பு முகமூடி அணிந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் மாலிக் பாட்ஷா, மாவட்ட துணை செயலாளர் அப்ரோஸ் கான் , செங்கம் நகர செயலாளர் பர்மானுல்லா, செங்கம் நகர துணை செயலாளர் பர்க்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர். வழக்கறிஞர், எஸ் .எம்.அன்சர் மில்லத் கண்டன உரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டத்தில், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கொரோனா காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மக்களுக்கு செய்தி வழங்கிவரும் பத்திரிக்கையாளர்களை பாதுகாத்திட வேண்டும், தொடர்ந்து இஸ்லாமியர்களின் உயிராய் திகழூம் நபிகளார் கேலிச் சித்திரம் வரையும் பாசிச வாதிகளை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முன்வைத்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி , எஸ்டிபிஐ கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆகிய கட்சிகளை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். வழங்கினார்கள்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..