பெரியகுளத்தில் ரேசன் பொருட்கள் வழங்காததால் நியாய விலைக்கடையை பொதுமக்கள் முற்றுகை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில நியாய விலை கடை எண் 5-ல் ரேசன் பொருட்கள் ஸ்டாக் இல்லாததால் ஏராளமான குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகம் செய்யாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நியாய விலை கடையை முற்றுகை செய்தனர். மேலும் ரேசன் பொருட்களை தனியார்க்கு விற்பனை செய்வதால் தான் இத்தகைய பிரச்சனைக்கு காரணம் என பொதுமக்கள் நியாய விலை உரிமையாளர்கள் மீது குற்றம் சாட்டினார்கள் . தகவலறிந்த தென்கரை காவல் துறையினர் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் , சப்-இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நியாய விலை கடையை முற்றுகை செய்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் . அதனைத்தொடர்ந்து நியாய விலை கடையில் பணிபுரிபவர்கள் ஸ்டாக் இல்லாததால் தான் விநியோகம் செய்ய முடியவில்லை மேலும் ஸ்டாக் வந்தவுடன் விநியோகம் செய்யப்படும் என கூறிய பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர் .

இவன் A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..