செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அரியவகை புள்ளிமான் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை !

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றிலும் காடுகள் அதிக அளவில் உள்ளன. இதில் அரிய வகை மான்கள், காட்டுப்பன்றிகள் இருக்கின்றன. தோக்கவாடி ஏரி, செங்கம் சுற்று வட்டாரத்தில் ஏரி பரப்பளவில் மிகப்பெரிய அளவில் இருந்ததால் அங்கு மான்கள் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தன. தற்போது குடிமராமத்து பணிக்காக தோக்கவாடி ஏரி கருவேல மரங்கள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடைபெற்றுவருவதால் மான்கள் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகளால் வேட்டையாடுவது வாடிக்கையாக நடைபெற்றுவருகிறது.இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.அன்சர் மில்லத் , மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். செங்கம் மில்லத் நகர் பகுதியில் குடிநீர் தேடி வந்த புள்ளி மான் இறந்து கிடந்ததை அடுத்து அந்த மான், சமூக விரோதிகளால் துப்பாக்கியால் வேட்டையாடி கொல்லப்பட்டதா, அல்லது விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கம் செய்தியாளர், சரவணகுமார்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image