Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மகளை இழந்து பரிதவித்த இளம்பெண்ணுக்கு உதவிய வருவாய்துறை அமைச்சர்..

மகளை இழந்து பரிதவித்த இளம்பெண்ணுக்கு உதவிய வருவாய்துறை அமைச்சர்..

by ஆசிரியர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த இட்லாபுரி பகுதியை சேர்ந்த திலாக என்ற பெண் கணவரை இழந்த நிலையில் அபிராமி என்ற தனது 16வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வருபவர். இந்நிலையில் மகளுக்கு இரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் கடந்த 23ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டவந்த நிலையில்  கொரோனோ தொற்று உறுதியாகி உயரிழந்துள்ளார்.

இதனையடுத்து தனது மகளின் சடலத்திற்கு இறுதிசடங்கு முடித்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தத்தனேரி மயானத்திலயே இரவு முழுவதிலும் தங்கிய நிலையில் உணவிற்கு கூட பணமின்றி மயானத்தில் இருந்து நடந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சொந்த ஊர் திரும்ப உதவுமாறு மதுரையிலுள்ள இரு தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் மதுரையில் உள்ள தினசரி நாளிதழின் மூத்த பத்திரிகையாரிடம் உதவிகோரியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக  செய்தியாளர்கள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் நேரில் சென்று அந்த பெண்ணின் நிலையை எடுத்துரைத்து அனைத்து உதவிகளையும் செய்துள்ளனர். வருவாய்த்துறை அமைச்சர்  அறிவுறுத்தலின்படி குமாரபாளையத்தை சேர்ந்த அந்த பெண்மணிக்கு உடனடியாக மதுரையிலிருந்து குமாரபாளையம் செல்வதற்கான பாஸ் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அவரை வழியனுப்பி வைத்தார்

தன் சொந்த ஊர் சென்றடைந்த அப்பெண அங்குள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவி செய்த வருவாய்த்துறை அமைச்சர் உடைய உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!