உசிலம்பட்டியில் ஆடி முதல்நாள் என்பதால் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாள் வெகுசிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம்.புதுமணத் தம்பதிகளை தாய் வீட்டிற்கு அழைத்து வந்து ஆடி மாதம் முழுவதும் சிறப்பான அசைவ விருந்து வைப்பர்.இந்நிலையில் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிந்த சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது.ஆனால் ஆடி முதல் நாள் என்பதால் கொரோனாவை மறந்த உசிலம்பட்டி மக்கள் முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இறைச்சிக் கடைகளி;ல் குவிந்தனர்.உசிலம்பட்டி பேருந்து நிலையப்பகுதிகளிலும் மதுரை ரோட்டில் தி.விலக்கில் உள்ள இறைச்சிக் கடைகளிலும் பொதுமக்கள் அதிகாலை முதலே கூட்டமாக குவிந்தனர்.கடைக்காரர்கள் பொதுமக்கள் உள்பட யாருமே முகக்கவசம் அணியாயதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.அரசு அதிகாரிகளோ காவல்துறையினரோ பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.உசிலம்பட்டிப் பகுதிகளில் கோழிக்கறி ரூ200 ஆட்டுக்கறி ரூ900 மீன் ரூ300வரை விற்பனையானது.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..