ராமேஸ்வரம் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம். திருக்கல்யாணம் யூ-டியூப் இணைய தளத்தில் ஒளிபரப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இந்தாண்டு ஆடித்திருவிழாவையொட்டி அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க இன்று (15.7.2020) காலை கொடியேற்றம் நடைபெற்றது. 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஆடித்திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் ராமேஸ்வரத்தில் முகாமிடுவது வழக்கம் . ஆனால் இந்தாண்டு கொரோனா தாக்கம் அதிகரிப்பால் தமிழக இந்து சமய அறநிலைய துறை கீழ் இயங்கும் அனைத்து திருக்கோயில்களுக்கும் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ராமநாதசுவாமி கோயில் இந்தாண்டு ஆடி திருவிழா முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் 26.7. 2020 (ஞாயிறு நடைபெற உள்ளது. இத் திருக்கல்யாண உற்சவம் பக்தர்கள் காணும் வகையில் யூடிப் இணைய தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் செய்துள்ளது. ஆடி திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து 20.7.2020ல் (திங்கள்) ஆடி அமாவாசை, 23.7.2020 ல் (வியாழன்) தேரோட்டம் நடைபெறுகிறது.ஆடி திருக்கல்யாண விழாவில் ஒன்றாம் நாள் முதல் 10ம் நாள் வரை சுவாமி புறப்பாடு, நான்கு ரத வீதி உலா கொரானா எதிரொலியால் இந்நிகழ்ச்சிகள் மூன்றாம் பிரகாரத்தில் கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெற உள்ளது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..