12
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறவர் தெரு கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு) சந்திரசேகர், அரசு போக்குவரத்து கழக நடத்துனர் பா.சக்திவேல், கா சேகர், சீ.முரளி ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மண்டபம் பேரூராட்சி திமுக., செயலாளர் டி.ராஜா ஆகியோர் முன்னிலையில் இன்று (ஜூலை 15) திமுகவில் இணைந்தனர்.
மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக., செயலாளர் ஏ.சி.ஜீவானந்தம், ராமநாதபுரம் கோட்டாட்சியர் (ஓய்வு) குணசேகரன், மாவட்ட திமுக., இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத்ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் இரா.ராஜகோபால், ந.பூவேந்திரன், வார்டு செயலர்கள் எம்.ரவி, எம்.மூர்த்தி, தகவல் தொழில் நுட்ப பிரிவு பேரூர் அமைப்பாளர் த. வெள்ளைச்சாமி , தொமுச நிர்வாகி மனோகரன், சீனிவாசன் களஞ்சியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.