உச்சிப்புளி – புதுமடம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி – புதுமடம் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எஸ்டிபிஐ., கட்சி சார்பில் இன்று 15.7.2020) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுமடம் கிளை தலைவர் எஸ்.முகமது ஜாபர் கான் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.ஐ. நூர் ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். மண்டபம் ஊராட்சி ஒன்றிய புதுமடம் கவுன்சிலர் எஸ்.அஜ்மல் சரிபு கண்டன உரை ஆற்றினார். ஏ. முகமது அஸ்லம் நன்றி கூறினார். உச்சிப்புளி – புதுமடம் சாலையில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை (எண்: 6988) உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

புதுமடம் ஊராட்சி பகுதியில் தொடரும் மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி காவல் துறையினருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி தொடரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும், புதுமடத்தில் பல இடங்களில் பழுதடைந்தமின் கம்பங்களுக்கு மாற்ற புதிய மின் கம்பங்கள் மாற்றக்கோரி மின் வாரியத்திற்கு பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதுமடம் ஊராட்சியில் உள்ள தெரு விளக்குகள், வீட்டு இணைப்புகளில் ஏற்படும் மின்பழுதை சரிசெய்ய லயன் மேன் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்றாத மின்வாரியம், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன

புனித ரமலான் வாழ்த்துக்கள்..