சுருக்குமடி விவகாரத்தினால் சீர்காழி பகுதியில் முன்னெச்சரிக்கையாக வஜ்ரா வாகனங்களுடன் 5-மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மீனவ கிராமங்களில் சுருக்குமடிவலையை பயன்படுத்தி மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுதொழில் செய்யும் மீனவர்கள், சுருக்குமடிவலையை பயன்படுத்தி மீன்பிடிக்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமுல்லைவாசல், கீழமூவர்க்கரை மீனவர்களிடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது.அதன்பினனர் சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்களை மீன்வளத்துறையினர் வாகனங்களுடன் பறிமுதல் செய்து வந்தனர். இதனால் சுருக்குமடிவலை பயன்பாட்டு மீனவர்கள், சிறுதொழில் மீனவர்கள் என மீனவர்கள் தொடர்ந்து போராட்டம், உண்ணாவிரதம் என மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. இதனால் மீனவ கிராமங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்த நிலையில் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், நாப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், காரைக்கால் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 21 மீனவ கிராமங்கள் சார்பில் சுருக்கு மடி வலைக்கு ஆதரவாக செவ்வாய்கிழமை கூட்டம் நடைபெற்றது.

சுருக்குமடி வலைக்கு எதிரான கருத்துக்களையும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அரசு தீர்வு தெரிவித்தால் வருகிற 17 ம் தேதி வெள்ளிக்கிழமை பழையார் முதல் கோடியக்கரை வரை உள்ள மீனவர்கள் அந்தந்த மீனவ கிராமங்களில் உள்ள கடலில் குடும்பத்தோடு இறங்கி உயிரை மாயித்துக்கொள்ளும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றயுள்ளனர். இதனால் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீர்காழி, பூம்புகார், சந்திரபாடி ஆகிய மீனவ கிராம பகுதிகளில் 11 ஏடிஎஸ்பி, 25 டிஎஸ்பி, 46 இன்ஸ்பெக்டர்கள், 190 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 1512 போலீசார் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கலவரத்தை கட்டுப்படுத்தும் 2 வஜ்ரா வாகனங்களும் வரவழைக்கப்பட்டுளது. இந்த போலீசார் திருமுல்லைவாசல், பழையார், மடவாமேடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களுக்கு பிரித்து அனுப்பபட்டு கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுப்படவுள்ளனர். சீர்காழி வஜ்ரா வாகனங்களுடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை  செய்தியாளர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image