சுரண்டையில் த.மா.கா சார்பில் காமராஜர் பிறந்ததின விழா..

தமாகா சார்பில் காமராஜர் பிறந்த தின விழா மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடந்தது. சுரண்டையில் தமாகா சார்பில் காமராஜர் பிறந்த தினவிழா மாநில தலைவர் ஜிகே வாசன் அறிவுறுத்தலின் படி, கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாநில செயலாளரும் மூத்த நிர்வாகியுமான என்டிஎஸ் சார்லஸ் ஏற்பாட்டில் தென்காசி மாவட்டம் முழுவதும் மாவட்ட தலைவர் அய்யாத்துரை தலைமையில் நடந்தது.

இந்நிகழ்வில் சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர் சிலைக்கு நகர தமாகா தலைவர் வசந்தன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொரோனாவை தடுக்க பொதுமக்கள் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி 500 போர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர தமாகா நிர்வாகிகள் மாரியப்பன், மகேந்திரன், இளைஞரணி அருண் தர்மராஜ், தங்கராஜ், மனோகர், ரவிராஜ், பாக்யராஜ், கண்ணன், மாடசாமி, ராஜீவ்காந்தி, ஆறுமுகம் யோகீஸ்வரர், அரவிந்த், பாபு, ஜிம் முருகன், ஜான்சன், மணிகண்டன், நாகராஜன், வினோத், சொரிமுத்து ஜயனார், மற்றும் தென்காசி. நகர தலைவர் வில்சன்,  வட்டார தலைவர்கள் தென்காசி சிவராஜ், ஆலங்குளம் கஸ்பார், கீழப்பாவூர் ரூபன், நகர தலைவர்கள் பாவூர்சத்திரம் சுடர்ஓளிவு, கீழப்பாவூர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image