ரேஷன் அரிசி வாங்க மதுரைக்கு 80 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்த முதியவர்.. மயங்கி விழுந்த பரிதாபம்..

ரேஷன் அரிசி வாங்க மதுரைக்கு 80 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்த முதியவர் மயங்கி விழுந்த பரிதாபம் நடைபெற்றுள்ளது.  ஆயிரம் ரூபாய் நிவாரணம் பெறமுடியாமல் ஏமாற்றமடைந்த தனக்கு அரசு உதவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் அரசால் வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிவாரணத் ரேஷன் அரிசி வாங்குவதற்காக 80 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த முதியவர் திருமங்கலம் அருகே மயங்கி விழுந்தார். தொடர்ந்து ரேஷன் கடைக்கு சென்ற அவருக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் இல்லை என கூறியதால் ரேஷன் பொருட்களை மட்டும் பெற்றுக்கொண்டு மீண்டும் ஊருக்கு செல்ல முடியாமல் தவிப்புக்குஆளாகியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை 59 இவர் இன்று திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் பகுதியில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.  அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மயக்கத்தை தெளியவைத்து விசாரித்தபோது முதியவர் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாகவும் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்ததால் மதுரை – தேனி சாலையில் மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வந்ததாகவும்,  தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால் 59 வயதான செல்லத்துரையின் முதுமையை காரணம்காட்டி அவர் பணிபுரிந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுவிட்டார். இவருக்கு திருமணமாகி 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. மனைவி வேலம்மாள் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். செல்லத்துரைக்கு வேலை இல்லாததால் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவிக்கும் கொரோனா காலத்தில் வேலை இல்லாததால் உணவிற்கே வழியின்றி தவித்து வந்ததாகவும் அண்மையில் மதுரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபகுதியில் வசிப்பவர்களுக்கு தமிழக அரசு கொரோனா நிவாரணம் ஆயிரம் ரூபாயும் ரேஷன் பொருட்களும் வழங்கியது. இதையறிந்த செல்லத்துரை குடும்ப சூழ்நிலையை கருத்தில் மதுரைக்குச் சென்று தனது குடும்ப அட்டைக்கான ஆயிரம் ரூபாயையும் ரேஷன் அரிசியையும் பெற்று வர முடிவு செய்து,  வாகன போக்குவரத்து ஏதும் இல்லாததால் தனது சைக்கிளிலேயே மதுரைக்கு பயணம் செய்ய முடிவெடுத்து காலை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி வந்ததாகவும்,  சாப்பிட ஏதும் வழி இல்லாததால் பசியால் சைக்கிளை ஓட்ட முடியாமல் களைப்படைந்து மயங்கிய விழுந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து செல்லதுரை திருமங்கலத்தில் தனக்குத் தெரிந்த வழக்கறிஞர் ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அங்கு வந்த வழக்கறிஞர் முதியவரிடம் விசாரித்து அவரை தனது காரில் மதுரையில் உள்ள டோக் நகர் ரேஷன் கடைக்கு அழைத்துச் சென்று ஆயிரம் ரூபாயும்,  ரேஷன் அரிசியும் வழங்கும்படி ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது நிவாரணத்தொகை கடந்த மாதமே கொடுத்து முடித்து விட்டதாகவும் தற்போது வேண்டுமானால் குடும்ப அட்டைக்கு உரிய அரிசி, சீனி மற்ற்உம் ரேஷன் பொருட்களை வாங்கி செல்லும் படியும் ஊழியர்கள் தெரிவித்து இந்த மாதத்திற்குரிய ரேஷன் பொருட்களை மட்டும் வழங்கியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்ல துரை ரேஷன் பொருட்களுடன் வழக்கறிஞருடன் திருமங்கலம் டோல்கேட் பகுதிக்கு வந்தார் . சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த செல்லத்துரை கொரோனாவால் வேலை இழந்ததோடு மட்டுமல்லாமல் சொந்த ஊருக்கு சென்றதால் கொரோனாவை காரணம்காட்டி குடும்ப அட்டையையும் மாற்ற முடியாத நிலையில் உணவுக்கே வழியின்றி குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த தனக்கு மதுரையில் உள்ள ரேஷன் கடையில் அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் குடும்ப செலவுக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து சைக்கிளில் வந்ததாகவும் ஆனால் இங்கு வந்த தனக்கு அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்பட்டது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். எனது குடும்ப சூழ்நிலை கருதி அரசு தனக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் இவர்களைப் போன்ற முதியவர்களை தனியார் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்வது வருத்தம் அளிக்க கூடிய ஒரு விஷயமாகும், இவரைப் போன்று பலர் வயதான காலத்தில் மாற்று வேலைக்கு செல்ல முடியாத நிலையில் குடும்பத்தை பராமரிப்பது மிகவும் சிரமமான ஒன்று என்பதால் அரசு அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..