டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு லாரி உரிமையாள்கள் சம்மேளனம் அறிவுறுத்தல் படி ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலா கார், வேன், ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் இன்று (ஜூலை 14) ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசின் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் வாழ்ந்த அனைத்து ஓட்டுநர்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், போக்குவரத்து போலீசார் பொய் வழக்கு போடுவதை கைவிட வேண்டும், காலாவதி டோல் கேட்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்ட கார், வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் ஜி.மாரிமுத்து தலைமை வகித்தார். தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் நியூட்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் ராமநாதன், பொருளாளர் சிவக்குமார், துணை செயலர்கள் மதிவாணன், ரெயின்போ செல்வம், ஊடகத் தொடர்பாளர் மோகன், செயற்குழு உறுப்பினர்கள் லோகநாதன், செய்யது, செல்வம், பாலாஜி, சுரேஷ், கார்த்திக், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..