செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் சார்பில் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வினியோகம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் சார்பில் 1500 குடும்பங்களுக்கு கொரானா தடுப்பு நடவடிக்கையாக ஆர்சனிக்கம் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரை 100 கொண்ட டப்பி மருந்து சாப்பிடும் முறை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கபஸ்சுர குடிநீர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 500 பேருக்கு ரெட் கிராஸ் சார்பில் நார்வே நாடு சத்துணவு பாக்கெட் ஆகியவை வீடு வீடாக வழங்கப்பட்டது மாரியம்மன் கோயில் அருகில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் தலைவரும் ரெட்கிராஸ் தலைவருமான அக்ரி வெங்கிடாஜலபதி தலைமை தாங்கினார் ரெட்கிராஸ் செயலாளர் தனஞ்செயன் வரவேற்றுப் பேசினார் நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ரெட்கிராஸ் தலைவர் இந்திரராஜன் கலந்துக்கொண்டு மாத்திரை டப்பி கபஸ்சுர குடிநீர் குழந்தைகள் சத்துணவு ஆகியவற்றை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் டி.வி.எஸ்.பார்த்தசாரதி எச்.பி.கேஸ் உரிமையாளர் அசோக் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் பின்னர் வீடு வீடாக மாத்திரைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..