
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் வனசோதனை சாவடி முன்பு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தொழிலாளர்கள் நலசங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
2006 வன உரிமை சட்டத்தை நடைமுறைபடுத்த கேட்டும், பொதுமக்களிடம் அத்துமீறும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், புதுநகர் பகுதியில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் குடும்பங்களை அங்கிருந்து அகற்றவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க நினைக்கும் வனத்துறையினரை கண்டித்தும் இன்று மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மலைகிராம விவசாயிகளின் பேரவைத்தலைவர் ஜியோ தலைவர், தடிக்காரன்கோணம் ஊராட்சி தலைவர் பிராங்கிளின் மற்றும் திமுக பேச்சாளர் சுந்தர் உட்பட, மலைகிராம விவசாயிகளும், சமூக ஆர்வலர் உருப்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்