சுரண்டை பகுதியில் நாளை முதல் கடைகள் வழக்கம் போல் திறப்பு…

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சுரண்டையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுரண்டை வியாபாரிகள் சங்கம், காமராஜர் காய்கனி மார்க்கெட் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு அதிகாரிகள் ஆலோசனை படி தாமாகவே முன்வந்து 3 நாட்கள் முழு கடையடைப்பு நடத்தினர்.இதனால் காய்கறி கடைகள், இறைச்சி, சிகிச்சை, மீன், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கடந்த சனிக்கிழமை துவங்கி நேற்று ஞாயிற்றுக்கிழமையும் கடையடைப்பு நடந்தது. இன்று 13-ம்தேதி திங்கட்கிழமையும் முழு கடையடைப்பு நடைபெற்றது.நாளை செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து கடைகளும் திறக்கப்படும். கொரோனாவை கட்டுபடுத்த உறுதுணை புரிந்த அனைத்து வியாபாரிகளும் நன்றி தெரிவித்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் அடைக்கவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..