தேநீர் விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞரின் தாராள மனசு. தினசரி 30 பேருக்கு உணவு..

மதுரை அருகே அலங்காநல்லூரில் தேநீர் விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞர் ஒருவர் தினசரி காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேலைகளில் ஏழை மக்களுக்கு உணவும், தண்ணீர் பாட்டில்களை வழங்கி வருகிறார்.இவர், தான் தினசரி சம்பதிக்கும் பணத்தில் , இந்த பணியை திறம்பட செய்து வருவதாக கிராம மக்கள் பலர் தெரிவித்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். வயது 23. பிஎஸ்ஸி பட்டதாரியான இவர், தனது இரண்டு வயதிலே தாய் மற்றும் தந்தையாரை இழந்து, சிலருடைய உதவியால், விருதுநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்துள்ளார். பிறகு இவர் பல ஊர்களுக்கு வேலை தேடி அலைந்துவிட்டு, மதுரை அருகே அலங்காநல்லூர் வந்துக்கு சாலையோரங்களில் படுத்தும், யாசகம் பெற்று, தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.திடீரென இவருக்கு தேநீர் விற்பனை செய்யும் எண்ணம் உருவாகி, கடந்த சில மாதங்களாக, அலங்காநல்லூர், கேட்டுக்கடை, காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் சைக்கிளில் வைத்து தினசரி காலை, மாலை, பிற்பகல் ஆகிய நேரங்களில் தேநீர் விற்பனை செய்து வருகிறராம்.இந்த தேநீர் விற்பனை செய்யும் தொகையிலிருந்து காலை டிபன் பத்து பேருக்கும், மதியம் சாப்பாடு பத்து பேருக்கும், இரவில் டிபன் பேருக்கும், தமிழரசன் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.மேலும், தேநீர் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு, அலங்காநல்லூர் அருகே கல்லனையில் வீடு வாடகைக்கு பிடித்து அங்கு தங்கி, இந்த பசியாற்றும் பணியை செய்து வருகிறார், பட்டதாரி இளைஞரான தமிழரசன்.இவர், தொழிலை மேம்படுத்த அப்பகுதியில் உள்ள வங்கியை அணுகியபோது, இவர் ஆதரவற்றோர் என்றும், குடும்ப அட்டை இல்லாததால், கடன் அளிக்க வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டதாம்.இவர், தினசரி தான் வழங்குகின்ற உணவுகளுடன் தண்ணீர் பாட்டில் ஆகியவை தேடி சென்றே வழங்கி வருகிறார்.இது குறித்து, தமிழரசனிடம் கேட்டபோது:நான், ஆதரவற்ற நிலையில் வளர்ந்ததால், என்னை போல யாரும் உணவின்றி சிரமப்படக்கூடாது என்ற எண்ணத்தில், தேநீர் வியாபாரம் மூலம் எனக்கு கிடைக்கின்ற வருவாயை வைத்து, இந்த உணவு தானத்தை , தினசரி செய்து வருகிறேன்.எதிர்காலத்தில் ஆதரவற்றோர் விடுதிகள் திறந்து ஏழை மக்களுக்கு உதவுவதே என் லட்சியமாக கொண்டுள்ளேன் என்றார்.இவருக்கு தொழிலை மேம்படுத்த மதுரை மாவட்ட நிர்வாகம் உதவவேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.இவரை பாராட்ட நினைத்தால்…6389476932..என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..