அமைச்சருடன் சந்திப்பு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமாருடன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப்பொதுச் செயலாளர் ஆ.செல்வம், , .மொ.ஞானத்தம்பி, மாநிலத்துணைத்தலைவர், இரா.தமிழ், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தித்து பேசினர் .இச்சந்திப்பில் வருகின்ற 14 7 2020 முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமும் பெருந்திரள் முறையீடும் நடைபெற உள்ளது. இதனிடையே 14/ 7 /2020 அன்று தமிழக அமைச்சரவை கூட்டம் உள்ளது. எனவே அமைச்சரவையில் நமது கோரிக்கை குறித்து  தமிழக முதல்வரிடம் பேசுவதற்காக வருவாய் துறை அமைச்சர் R.B. உதயகுமாரிடம் நமது கோரிக்கைகளான கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்னாள் வீரர்களான அரசு ஊழியர்கள் இறந்தால் 50 லட்சம், இறந்த அரசு ஊழியர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி கொரானா நோய் ஏற்படும் அரசு ஊழியருக்கு ஊக்கத்தொகையாக 2 லட்சம், 2019 ஆம் வருடம் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர் ஆசிரியர் மீது போடப்பட்ட 17ஆ குற்ற குறிப்பானை மற்றும் FIR ஆகியவற்றை திரும்பப் பெறப்பட வேண்டும், 2011& 2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், MRB செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் நிச்சயமாக இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் தங்களுடைய கோரிக்கைகள் பேசப்படும் என்றும் நிறைவேற்று வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image