இந்தி நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று-அச்சத்தில் சினிமா பிரபலங்கள்..

இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இது குறித்து அமிதாப் பச்சன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ‘எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்,’என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தி நடிகர் அமிதாப் பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தகவலறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அமிதாப்பை டுவிட்டரில் பின் தொடர்பவர்கள் , அமிதாப் ரசிகர்கள் அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தேசிய அளவில் பிரலபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருவதால் சினிமா,அரசியல் பிரபலங்கள் அச்சமடைந்துள்ளனர்.

செய்தித்தொகுப்பு
அபுபக்கர்சித்திக்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal