செங்கம் சுற்றுவட்டார பகுதியில் முழு ஊரடங்கு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எந்தவித தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலங்களில் அத்தியாவசிய கடைகளான மருந்து கடைகள், மளிகை கடைகள், பால் பூத் நிறுவனங்கள் மட்டும் செயல்பட்டன. வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது..செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு திரை படிக்கப்பட்டது. பொதுமக்களும் எக்காரணத்தை கொண்டு வெளியில் வரக்கூடாது. அவசரம் மற்றும் ஆஸ்பத்திரி தேவைகளுக்காக மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.வெளியே சுற்றும் நபர் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி போலீசாரும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் இதனால் தங்கம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image