Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருவதால் ஊரடங்கு நீட்டிப்பு தேவை உள்ளது.. அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி…

மதுரையில் காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருவதால் ஊரடங்கு நீட்டிப்பு தேவை உள்ளது.. அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி…

by ஆசிரியர்

மதுரையில் காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருவதால் ஊரடங்கு நீட்டிப்பு தேவை உள்ளது என முதல்வரிடம் அறிக்கை கொடுத்துள்ளோம் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி.

வட பழஞ்சியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இவைகளெல்லாம் தீவிரப்படுத்தப்பட்டு அதற்கு முதல்வர் அறிவுரைப்படி ஜூலை 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது தற்போது வரை பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டு ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு வருகிறது.

1400 படுக்கைகள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பாக மூச்சுத்திணறல் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிசன் வசதியோடு அனைத்து வசதிகள் தயார் செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆக்சிஜன் வசதியுடன் அரசு மருத்துவமனைகளில் 450 படுகைகள் தயாராக உள்ளது தனியார் மருத்துவ மனையில் 800 முதல் 900 வரை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது கோவிட் கேர் சென்டர் மதுரையில் 21 சிகிச்சை மையங்கள் முதல்வர் உத்தரவுப்படி செயல்பட்டு வருகிறது மாவட்ட நிர்வாகம் இதில் அதிக கவனம் செலுத்தி கிட்டத்தட்ட 2100 படுகைகளை தயார் நிலையில் உள்ளது. வடபழஞ்சி உள்ள தகவல் தொழில்நுட்பத்தின் சிறப்பு மண்டலத்தில் மூன்று அடுக்கு கட்டிடம் உள்ளது பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தை முதல்வருக்கு தகவல் அளிக்கப்பட்டு தற்போது 1000 படுக்கைகள் தயார் படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை மையமாக செயல்படுத்தப்பட உள்ளது. மூன்று தலங்களிலும் அடிப்படை வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் தயாராகி வருகின்றது.

இதற்கென்று தனியாக மண்டல அதிகாரி நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கடந்த 3 நாட்களாக மதுரையில் நோய்தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக வருவது ஆறுதல் அளிக்கிறது மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கிராமப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியில் காய்ச்சல் முகம் ஏற்படுத்தியது போல கிராமப்புறங்களிலும் காய்ச்சல் முகாமும் நடத்தப்பட்டது. இந்த முகாம் நடத்தப்பட்டதால் நல்ல பலனை கொடுத்துள்ளது மக்கள் அளித்த ஒத்துழைப்பும் மிக நல்ல பலனை கொடுத்துள்ளது வரும் காலங்களிலும் மக்களின் ஒத்துழைப்பால் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது மதுரை பொறுத்தவரை மக்கள் கொடுக்கின்ற ஒத்துழைப்பு நல்ல பலனை கொடுப்பதால் ஏற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. மதுரை கட்டுக்குள் இருக்கிறது தொடர்ந்து குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு,  தற்போது ஆறாவது முறையாக பொது ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது தீவிர காய்ச்சல் சிகிச்சை முகாம் பலனை தருவதால் ஊரடங்கு தொடரலாம் என்று மாவட்ட நிர்வாகம் மருத்துவமனை அதிகாரிகள் மூலம் ஆலோசனை மேற்கொண்டு முதல்வரிடம் விவரங்கள் கொடுத்துள்ளோம். மதுரையின் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் விரிவான ஆலோசனை மேற்கொண்டு மதுரையில் ஊரடங்கு நீடிப்பதற்கான அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!