மதுரை-கடைசி வரை 10 ரூபாய்க்கு சோறு போட்ட ராமு தாத்தா காலமானார்-

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் பழைய அண்ணா பேருந்து நிலையம் எதிரில் பொதுமக்களுக்கு 2ரூபாய்க்கு சாப்பாடு வழங்க ஆரம்பித்து, பின்பு 5ரூபாய், 7ரூபாய் என கடந்த 6மாதங்களுக்கு முன்பு வரை சாப்பாடு 10ரூபாய்க்கு வழங்கி வந்தவர் அய்யா வில்லூர் ராமுத்தேவர். இவரை பற்றி ஆர்டிகல் எழுதாத பத்திரிக்கை இல்லை, இவரது உணவு சமைப்பதை மாவட்ட நிர்வாகம் பலமுறை சோதித்தும் ஆரோக்கியமான உணவு வழங்கி வருகிறார் என பல மாவட்ட ஆட்சியரின் பாராட்டு பெற்றவர். இன்று அடித்தட்டு மக்களின் வயிற்றுக்கு பசியாற்றிய அய்யாவில்லூர்_ராமுத்தேவர் அவர்கள் காலமானார். தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மீது அதிக பற்றும், பாசமும் கொண்ட பக்தர். தனது கடையில் தேவரின் திருவுருவப்படத்தை வைத்திருப்பார். Googleஇல் தேடி பாருங்கள் 5ரூபாய் சாப்பாடு ராமுத்தேவர் என்று இவர் வரலாறு சொல்லும்… ஊருக்கே உணவளித்த ராமுதேவர்மறைந்து_விட்டார்.அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு மதுரை மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்