இந்தியா தொழில் துறையில் முதன்மை நாடாக விளங்க வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள அமுதா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவின் தலைவர் ஜீவானந்தம்  தலைமை தாங்கினார்.நகர தலைவர் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தினார், இந்தக் கூட்டத்தில் கிளை மற்றும் வங்கி கடன் கொடுக்க நிர்வாகிகள் இடத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மாநில பார்வையாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விகேஆர் சீனிவாசனக்கு மாவட்ட கூட்டத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சீனிவாசன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார் ரமேஷ், சேகர், மாவட்ட துணைத்தலைவர்கள் முருகன், ஜெயராமன், சுந்தரமூர்த்தி, மகளிர் அணி பானு நிவேதிதா, கவிதா, மலர்கொடி, ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட அணி பிரிவு நிர்வாகிகள் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தில் கலந்துகொண்டனர்.மாற்றுக் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சீனிவாசன்  முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்இந்தக் கூட்டத்தில் இறுதியாகக் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி  நன்றி உரையாற்றினார்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி  அறிவித்த ரூபாய் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பொதுமக்கள் மற்றும் வணிக பெரு மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு கடனுதவியை பெற்றுத்தர மாவட்ட பார்வையாளர் சீனிவாசன்  தகுந்த ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.மேலும் இந்தியா தொழில்துறையில் முதன்மை நாடாக விளங்க வேண்டும் என்பதே  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  சீரிய எண்ணமாக உள்ளது .எனவே தான் 20 லட்சம் கோடி ரூபாயை தொழில் துறையினருக்கு வாரி வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.

செங்கம் செய்தியாளர், சரவணகுமார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image